பகுத்தறிவு
December 25, 2019
Since there has been lot of talk about “பகுத்தறிவு” in Tamil Nadu, India and so much confusion around it, I decided to write about it. Otherwise an entire generation and possibly all future generations wouldn’t know what is “பகுத்தறிவு”?
அதெப்படி, ஒரு group/ குறிப்பிட்ட மக்கள் மட்டும் அறிவாளி ன்னு சொல்றாங்க? அப்படின்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் பகுத்தறிவு இயக்கம். கடவுளை நோக்கி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலர் மன நிம்மதிக்காக வருவார்கள் , ஒரு சிலர் பண பிரச்சனை போக வேண்டி வருவார்கள் ஆனால் எத்தனை பேர் அறிவை தேடி கடவுளிடம் வருவார்கள் என்று தெரியவில்லை.
பகுத்தறிவு , பகுத்தறிதல் – English ல, discernment ன்னு சொல்வார்கள். நீயா , அதாவது சுயமா யோசிங்கன்னு ஆரம்பிக்கப்பட்டதுதான், சுய மரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம். தி.க , தி.மு.க….
அது சரி, கிறிஸ்தவன் ஆன எனக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் ன்னு யோசிக்கறீங்களா? கர்த்தரை ஒருவன்/ஒருவள் தெய்வமாக ஏற்று கொண்ட பிறகு, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி, அதற்கு பிறகு, அவர்களுக்கு கொடுக்க கூடிய 9 வரங்களில் ஒரு வரம், இந்த பகுத்தறிவு (மீதி 8 வரம் வேற)
9 கனிகள், 9 வரங்கள் கர்த்தராகிய இயேசு தருகிறார் நீங்க அவர தெய்வமாக ஏற்று கொண்ட பிறகு. English ல- 9 fruit of the Spirit, 9 gifts (வரங்கள்) of the Spirit அப்படின்னு சொல்லுவோம்.
வேதாகமத்தில் (Bible), இந்த 9 வரங்களை பற்றியும் இவ்வாறாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. “ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.” 1 கொரிந்தியர் 12:7-11 TAMIRV
கடவுளை தேடி வருகிறவர்கள், என்ன வேண்டி / என்ன தேவைக்காக வருவார்கள் என்பது ஒவ்வொருக்கும் வித்தியாசப்படும். கடவுள் , சாலமோனின் முன்பு தோன்றி , உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, சாலமோன் கேட்ட ஒரே ஒரு விஷயம், ஞானம் (1 Kings 3: 5-14, 1 இராஜாக்கள் 3:5-14)
மற்ற எல்லா விஷயங்களை விட , கடவுளிடம் ஞானத்தை கேளுங்கள், ஏன்னா , உலகம் நமக்கு கற்று தரும் விஷயம் கூட என்னவெனில் ஒருவனுக்கு தினமும் நீங்கள் மீன் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்று தருவதே நல்லது. ஒருவன் பகுத்தறிவை பெற்று கொண்டால், அனைத்தையும் பெற்று கொண்டான் என்றே அர்த்தம்.
ஒருவரின் அறிவை மழுங்கடிக்கனும்ன்னா, என்ன பண்ணனும்ன்னு , நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். தமிழ் சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமா வரனும்ன்னு தான் பகுத்தறிவு இயக்கம் எல்லாம் ஆரம்பிச்சு இருப்பாங்க. அப்படி பகுத்தறிவு இயக்கம் ஆரம்பித்தவர்களில் யாரும் கிறித்துவராக இருந்திருக்க கூட வாய்ப்பு இல்ல.
கடவுளே இல்லை என்று சொல்வதில்லை/மறுப்பது இல்லை பகுத்தறிவு இயக்கத்தின் வேலை. கடவுள் உனக்குள் இருக்கிறார் என்று சொல்வதே பகுத்தறிவு இயக்கத்தின் வேலை. கடவுள் எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை சொல்வதே பகுத்தறிவு இயக்கத்தின் வேலை. இந்த ஒரு சின்ன blog மூலமாக , பகுத்தறிவின் மூலம் , அதாவது பகுத்தறிவின் ஆரம்ப புள்ளி, கிறிஸ்த்தவம் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.